தமிழக பாஜகவில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பலர் இன்று இணைந்துள்ளார்கள். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் வெறும் 5 மாதங்களே உள்ள நிலையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில் கட்சிவிட்டு கட்சி தாவும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக பாஜக இளைஞர் அணியின் தலைவர் S.G.சூர்யா முன்னிலையில், 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
