டெல்லி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்… சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்…!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை கார் ஓன்று வெடித்து சிதறி, 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெய்ப்பூர், ஹரியானா, பஞ்சாப், ஹைதராபாத், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இடங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஷஹீன் சயித் தீவிரவாத செயல்களை மறைக்க டாக்டர் ஆக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. லக்னோவில் இருந்தபடி அவர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக நிதி திரட்டும் வேளையில் ஈடுபட்டுள்ளார்.