அடுத்த பரபரப்பு..! சற்றுமுன் நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…!

By Soundarya on கார்த்திகை 11, 2025

Spread the love

சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலையடுத்து காவல்துறையினர்  சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டலானது வெறும் புரளி என தெரிய வந்த‌து. சமீப நாட்களாக தமிழக சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் தினமும் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.