TVK தலைவர் விஜய் தமிழகத்தில் திமுக ஆட்சியை ஒழித்து தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கொண்டு வரவேண்டுமென்று அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகிறார். மற்ற கட்சிகள் TVK-வை குறிவைத்து வருகின்றன. இதற்கிடையில் கட்சி தாவல் நடந்து வருகிறது. இந்நிலையில் தவெகவின் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஜய் இன்று சீமான் முன்னிலையில் நாதக-வில் இணைந்தார்.
இவருடன் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும், நாதகவில் இணைந்துளார்கள். இத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அஜய், ‘தவெக-வில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிப்பில்ல்லை, ஒருங்கிணைப்பு இல்லை , பல மாவட்டங்களில் பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்படுவதாகவும் புகார் கூறியுள்ளார்.
