மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்… டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் புதிய திட்டம்…!!

By Soundarya on கார்த்திகை 11, 2025

Spread the love

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது.   அனைத்து நாட்களிலும், தினமும் மதியம், 12 முதல் இரவு, 10 மணி வரை செயல்படுகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் MRP விலையில் மதுபானம் விற்க நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 70 டாஸ்மாக் கடைகளில் விரைவில் இந்த திட்டமானது அறிமுகம் செய்யப்படவுள்ளது. டிஜிட்டல் பணம் செலுத்தும் பொழுது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் QR கோடு உருவாக்கப்படும். பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில், இந்த திட்டம் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.