விஜய் தமிழகத்தில் திமுக ஆட்சியை ஒழித்து தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கொண்டு வரவேண்டுமென்று அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகிறார். மற்ற கட்சிகள் TVK-வை குறிவைத்து பேசி வருகின்றன. இதற்கிடையில் கட்சி தொடர்பான வேளைகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொதுச் சின்னம் கோரும் மனுவை டெல்லியில் உள்ள ECI தலைமை அலுவலகத்தில் CTR நிர்மல்குமார் வழங்கினார்.
அதில், ECI-ல் ஏற்கெனவே உள்ள ஆட்டோ, விசில், கிரிக்கெட் பேட், சாம்பியன் கோப்பை மற்றும் கப்பல் போன்ற சின்னங்களும், TVK நிர்வாகிகளின் பரிந்துரைகள் மூலமாக புதிதாக வரையப்பட்ட ஐந்து சின்னங்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
