கர்நாடக மாநிலம் பெங்களூர் கிரி நகர் பகுதியில் வசித்து வரும் ககன்ராவ்(29) என்பவர் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மேகனா ஜாதவ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணமான புதிதியில் மகிழ்ச்சியாக சென்ற புதுமண தம்பதியின் வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது மேகனா தனது கணவரிடம் எந்த காரணமும் இல்லாமல் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த தகராறு நாளுக்கு நாள் அதிகரித்ததால் புது மாப்பிள்ளை ககன் ராவ் வாழ்க்கையில் விரக்தி அடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் அவரிடம் மேகனா தகராறு செய்ததால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் ககன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்ததும் அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்த விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பெண் திருமணமான நாளிலிருந்து மனரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் அவருடைய தூண்டுதலால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி தொல்லையால் புது மாப்பிள்ளை திருமணமான எட்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
