“அம்மா SORRY, என் புருஷனுக்கு என் உடம்பு தான் முக்கியம்”… நான் சாகப் போறேன் ஒருத்தரையும் சும்மா விடாத… கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை…!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில் பணத்துக்காகவும் நகைக்காகவும் புகுந்த வீட்டின் மற்றொரு மகளாக வாழ்க்கையை தொடங்கும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை கொடுத்து தற்கொலைக்கு தூண்டும் அவலம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அப்படி ஒரு துயர சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது. “அம்மா என்னை மன்னித்துவிடு, என் கணவன் விரும்புவது என் உடலை மட்டுமே, மனதை அல்ல, என் சாவிற்கு மாமனார் மாமியார் உள்ளிட்டோர்தான் காரணம் என்று கேரளாவில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரேஷ்மா என்ற பெண் எழுதிய கடிதம் சிக்கி உள்ளது.

திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த நகைகளை தன்னுடைய பெற்றோரிடம் திரும்பிக் கொடுக்க வேண்டும் எனவும் அந்தப் பெண் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தொடர் வரதட்சணை கொடுமையால் ரேஷ்மா கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து சென்ற போலீசார் ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி கணவர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். இது குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.