தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் இபிஎஸ் அதிமுக தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிர்வாகிகளை நீக்கிவிட்டு மீண்டும் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றார்.
சமீபத்தில் கூட செங்கோட்டையன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த நிலையில் அவரை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பெயரை கட்சியிலிருந்து நீக்கினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
