“இந்தா… கொஞ்சம் சாப்பிடு…”குரங்குக்கு ஆசையாக கொய்யாப்பழம் ஊட்டி விட்ட போதை ஆசாமி… அடுத்து என்னாச்சு தெரியுமா…?

By Devi Ramu on கார்த்திகை 10, 2025

Spread the love

சென்னை மாவட்டம் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார். இந்த நிலையில் குமார்  ஒயின் ஷாப் அருகே அமர்ந்திருந்த குரங்குக்கு கொய்யாப்பழம் ஊட்டினார். அப்போது அமைதியாக இருந்த குரங்கு திடீரென கோபமடைந்து சட்டென பாய்ந்து குமாரை கடித்து குதறியது.

உடன் இருந்த நண்பர் குரங்கு கடிக்கும் என எச்சரித்தும் குமார் கேட்கவில்லை. வலுக்கட்டாயமாக பழம் ஊட்டினார். உடனே கோபமடைந்த குரங்கு அவரை தாக்கிய காட்சியை சிலர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.