தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக இபிஎஸ் குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்திருந்தார். அதன்படி நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கோதுமை அனுப்பப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்திற்கான கோதுமையை இன்னும் பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் நவம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
