6 மாதம் குழந்தை முதல் 60 வயசு பாட்டி வரை விட்டுவைக்கல… தமிழகம் தரம் தாழ்ந்து விட்டது… இது ஒரு சாபக்கேடு… அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு பதிவு…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கின் அவல நிலையை காவலர் குடியிருப்பில் நடந்த படுகொலை சம்பவம் எடுத்துரைப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியில் தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாலே இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அதன் உச்சகட்டமாக இன்று காலை திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில் குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது பொதுமக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தற்போது திருச்சியில் தான் தங்கி இருக்கிறார்.

அப்படி இருக்கும் பட்சத்தில் காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் அவல நிலையை காட்டுகிறது. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது. காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின் கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என்று அண்ணாமலை ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.