“நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் வாடி”.. ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம்… கர்ப்பமானதும் கழட்டிவிட்ட காதலன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

கர்நாடக மாநில ஹாவேரி மாவட்டம் சங்கரி கொப்பா கிராமத்தை சேர்ந்த சிந்து பரவன்னவர்(25) என்ற இளம் பெண்ணும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த சரத் நீலப்பா என்ற வாலிபரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே திருமண ஆசை வார்த்தை கூறி சிந்துவுடன் சரத் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிந்து கர்ப்பமான நிலையில் சிந்துவை திருமணம் செய்ய அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சரத்தின் தங்கையும் தனது கல்லூரி தோழியுமான காவியாவிடம் நடந்த விபரத்தை சிந்து கூறியுள்ளார். ஆனால் காவியாவும் சிந்துவை மிரட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த சிந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய தற்கொலைக்கு சரத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தான் காரணம் என்று சிந்துவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சிந்துவின் உடலை சரத்தின் வீட்டின் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சமாதானம் பேசினர். இந்த புகாரை தொடர்ந்து சிந்துவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய காதலன் சரத், அவருடைய தந்தை சுரேஷ் , தாய், தங்கை, உறவினர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த 11 பேரும் தலைமறைவாகிவிட்டர். அவர்கள் 11 பேரையும் தற்போது போலீசார் தொலைபேசி தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது