1 இல்ல 2 இல்ல எத்தனை பேர் வந்தாலும் டோன்ட் கேர்… மீண்டும் திமுக ஆட்சி தான்… முதல்வர் ஸ்டாலின் பேட்டி…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி மனுவில் பழனிச்சாமி ஏன் இணைந்துள்ளார். அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை. அதனால் விமர்சனத்தை முன் வைக்கிறார். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எங்களுடைய வேலையை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். SIR குறித்து நீதிமன்றத்திற்கு போயிருக்கிறோம். நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம்.

அதன் பிறகு பொறுத்திருந்து பாருங்கள். குற்றச்சாட்டுகள் கூறும் எதிர்க்கட்சிகளுக்கு வேற வேலை கிடையாது. அதை தான் அவர்கள் செய்தாக வேண்டும். எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையில் இருக்கிற கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும். ஏழாவது முறையாக நிச்சயம் திமுக தான் ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை பலவீனமாகவும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.