தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை… நவம்பர் 13 வரை வந்தது அலர்ட்…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களிலும் நாளை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். அதனைப் போலவே நவம்பர் 13ஆம் தேதி கோவை, நீலகிரி, தூத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது