இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000… மு.க.ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்….!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் தராத பெண்கள் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் உதவித்தொகை பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்களில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெரும்பான்மையான விண்ணப்பங்கள் மகளிர் உரிமை தொகைக்கு வந்துள்ள நிலையில் தகுதியுள்ள அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பாதியில் நிறுத்தி விடுவார்கள் என சிலர் அரசியல் உள்நோக்கத்தோடு பேசுகின்றனர். அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட போவதில்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் மகளிர் உரிமைத்தொகை தொடரும் என உறுதி அளித்துள்ளார்.