கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த சந்திர குமார் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி எரிச்சர்ட் லீமா. இந்த தம்பதியினருக்கு 17 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக லீமாவும் அவரது மகனும் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த லீமா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
இதனடுத்து தான் இல்லை என்றால் தனது மகனை யார் கவனித்துக் கொள்வார்கள் என்ற பயத்தில் தூங்கிக் கொண்டிருந்த மகனின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை கண்விழ்த்து பார்த்த சந்திரகுமார் தனது மனைவியும் மகனும் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
