“வாடகைக்கு வீடு எடுத்து மாறி, மாறி…” ஸ்பாட்டில் இருந்த பெண்கள்…. 4 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. வெளியான பகீர் தகவல்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 10, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சித்தூர் சாலை பாலாஜி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு கும்பல் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர்.

பாலாஜி நகர், சப்தகிரி நகர், சாய்முருகன் நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். ஒரு வீட்டில் 4 பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஆண் புரோக்கர்கள் கணேசன் (42),  அவரது தம்பி கார்த்திக் (30), அருண்குமார் (33), வசந்தகுமார் (26) ஆகியோரை கைது செய்தனர்.

   

விசாரணையில் இவர்கள் பலமுறை வெவ்வேறு பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து இதைத் தொழிலாகச் செய்து வந்தது தெரியவந்தது. ஒரே நேரத்தில் 2-3 வீடுகளை வாடகைக்கு எடுத்து மாறி மாறி விபச்சாரம் செய்து போலீசாரிடம் தப்பித்துள்ளனர். கைதானவர்களில் இருவர் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட 4 பெண்கள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.