யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… இரவோடு இரவாக விஜய்யை சந்தித்த திமுக கூட்டணி கட்சி MP…. வெளிவந்த சீக்ரெட்…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் டெல்லி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக இபிஎஸ் தொடர்ந்து விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் சமீபத்தில் கூட கூட்டணிக்கு பிள்ளையார் சூழலில் போடப்பட்டு விட்டதாக சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.

   

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சி எம்பி ஆன சு.வெங்கடேசன் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜயை சந்தித்து பேசியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால் இது அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாதாம். சினிமா தொடர்பான சந்திப்பு என கூறப்படுகிறது. வேள்பாரி நாவலை 3 பாகங்களாக சங்கர் படமாக்கும் நிலையில், அதில் விஜய் ஒரு பாகத்தில் நடிப்பதாக பேச்சு இருந்தது. அது தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.