காலையிலேயே தமிழக அரசியலில் பரபரப்பு… திமுகவில் இணையும் ஓபிஎஸ்?… அவரே வெளியிட்ட சீக்ரெட்…!

By Nanthini on கார்த்திகை 9, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதே சமயம் எந்த கட்சி பலமாக இருக்கிறதோ அந்தக் கட்சியில் கூட்டணியில் இணையும் முயற்சியில் மாற்றுக் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் அரசியலில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் தொடர்ந்து இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் தான் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்படுவது வதந்தி என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அவருடைய வலது கரமாக செயல்பட்டு வந்த மனோஜ் பாண்டியன் அண்மையில் திமுகவில் இணைந்தார். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினை ஒபிஎஸ் சந்தித்து பேசி இருந்த நிலையில் அவரும் அதிமுகவில் இணைய உள்ளார் என்று தகவல் பரவியது. இதனிடையே அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பலரும் திமுகவில் இணைவார்கள் என அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் திமுகவில் தான் இணைய இருப்பதாக கூறப்படுவது வதந்தி என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.