ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்காக தபால் துறையும் தபால் கட்டண வங்கி நிர்வாகமும் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்துகின்றன. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இந்த முகாம்கள் வருகின்ற நவம்பர் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் மூலமாக ஓய்வூதியத்தாளர்கள் ஆதார் அடிப்படையிலான சான்றிதழ்களை எந்த தபால் அலுவலகத்திலும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் தபால்காரர் மூலமாகவும் வீட்டில் இருந்தே சான்றிதழ்களை பெறும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டவுடன் ஆயுள் சான்றிதழ் தானாகவே சம்பந்தப்பட்ட அரசு ஓய்வூதிய அமைப்புகளுக்கு வழங்கப்படும். இந்த அறிவிப்பு ஓய்வூதியத்தாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
