தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் தராத பெண்கள் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் உதவித்தொகை பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்களில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அரசு புதிய தளர்வுகளை வழங்கியுள்ளது. அதன்படி பென்ஷன் பெரும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் இந்தத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறலாம். ஓய்வூதியம் பெறும் பெண்கள் விண்ணப்பிக்க முடியாது. அதே நேரத்தில் அந்த வீட்டில் இன்னொரு பெண் இருந்தால் அவர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்தான். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அடுத்த வாரம் அதாவது நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
