இப்போதெல்லாம் அழகாக முடிவெட்டிக் கொள்வது என்பது சவாலான வேலையாகவே மாறிவிட்டது. ஒவ்வொரு முறையும் நண்பர்கள் நம்ம கேலி செய்யாத அளவுக்கு அழகாக சிகை அலங்காரம் அமைவதற்கு தனி முடி வெட்டுபவரை தேர்வு செய்து காத்திருந்து. ஆனால் இனி அதற்கு கவலையில்லை. ரோபோ எந்திரம் நீங்கள் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும். அப்படி ஒரு எந்திரத்தில் வாலிபர்கள் சிலர் முடி வெட்டி சிகை அலங்காரம் செய்து கொள்ளும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி விடுகிறது.
View this post on Instagram
இது நிஜம்தான். கற்பனை, சினிமா காட்சி அல்ல. ஆட்டோ ஸ்ட்ரீட் பார்பர் என்று குறிப்பிடப்படும் அந்த எந்திரம் ஸ்பீக்கர் போன்ற தோற்றத்தில் உள்ளது. அதில் விரும்பிய ஸ்டைல் குறித்த கட்டளைகளை கொடுத்தால் வாஷிங் மெஷின் கதவு போன்ற ஒரு திறப்புக்குள் நம்முடைய தலையை நுழைத்தால் சில வினாடிகளில் சிகை அலங்காரத்தை முடித்து விடும் அந்த ரோபோ. அதிகபட்சம் ஒரு நிமிடம் கூட ஆகாது. இந்த எந்திரங்கள் நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.
