“உன் கூட வாழ பிடிக்கல”… விவாகரத்து கேட்ட மனைவி… அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

பெங்களூரில்அமிர்த நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் கோவிந்தராஜ் (27). இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தீ மற்றும் பாதுகாப்பு மேற்பார்வையாளராக பணியாற்றிவரும் நிலையில் 23 வயதில் மனைவியும் உள்ளார். இதனிடையே திருமணத்திற்கு பிறகு கணவர் தன் மனைவியின் சம்பளத்தை ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தி வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனைவி ஆந்திராவில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவிடுவார். மனைவி சென்ற பிறகும் கணவன் தொலைபேசியில் மிரட்டி அந்தரங்க புகைப்படங்களை ஆன்லைனில் பகிர்ந்து விடுவதாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி பயந்து போய் மீண்டும் சென்னைக்கு வந்த நிலையில் கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்த துன்புறுத்தலால் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார்.

   

இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை Threads செயலியில் அவருடைய நண்பர்களை Tag செய்து பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த நண்பர்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மனைவி போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மனைவி விவாகரத்து கேட்டதற்காக கணவன் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.