இபிஸ்-க்கு அடுத்த ஷாக்…. அதிமுகவில் மீண்டும் இணைப்பு… சற்றுமுன் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on கார்த்திகை 7, 2025

Spread the love

அதிமுகவில் இருந்து சமீபத்தில் செங்கோட்டையன் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று அவருடைய ஆதரவாளர்கள் 14 பெயரை கட்சியிலிருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நான் பேசி வருகின்றேன். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்த்தால் தான் கட்சிக்கு வெற்றி கிடைக்கும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. கட்சிக்காக உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்காக எம் பி சீட் வழங்கியவர் எடப்பாடி. தன்னை முதலமைச்சர் ஆகிய சசிகலாவையே கொச்சைப்படுத்தியவர். எதிர்த்து பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவது கட்சியையும் அந்நபரையும் பலவீனப்படுத்தும். தன்னை போன்றவர்கள் முன்மொழிந்ததால்தான் இபிஎஸ் முதல்வர் ஆனார் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.