தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் களத்தை நோக்கி அனைத்து கட்சிகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனிடையே தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் 2026 தேர்தல் கூட்டணி அமைப்போம்.
ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டிற்கு பிறகு கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். அமைச்சரவையில் பங்கேற்றால்தான் மக்களின் குறைகளை போக்க முடியும் என்றும் அதற்கான அரசியல் களத்தை அமைப்போம் எனவும் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் மட்டுமல்ல ஆட்சியிலும் பங்கு கொடுக்கும் அளவில் தான் எங்கள் கூட்டணி அமையும் என்ற திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.
