பாமக நிறுவனதாஸ் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அரசியலில் சில தவறுகளை நான் செய்துவிட்டேன். அதில் முதல் தவறு அன்புமணியை மந்திரியாக்கியது. இரண்டாவது அன்புமணிக்கு கட்சித் தலைவர் பொறுப்பு கொடுத்தது .நடக்கும் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். என்னை ஐயா என்று அழைத்த சிலர் அங்கு சென்று என்னைப் பற்றி பேசுகிறார்கள்.
எம்.எல்.ஏக்களில் இரண்டு பேர் என்னோடு இருக்கிறார்கள். மூன்று பேர் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போய்விட்டார்கள். அன்புமணியின் செயல்பாடுகள் எதுவும் சரியாக இல்லை. உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய பாசமுள்ள கட்சிக்காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்கு காரணம் அன்புமணியும், அவருடைய மனைவி சௌமியா அன்புமணியும் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
