பெரும் அதிர்ச்சி..! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் காணாமல் போன தங்க பல்லி சிலை…. பரபரப்பு புகார்..!!

By Soundarya on கார்த்திகை 6, 2025

Spread the love

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகிறார்க்ள. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது மட்டுமின்றி சாமிக்கு தங்கம், வெள்ளியில் பல்லி சிலைகளையும் கொடுத்து தரிசனம் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த கடையில் வெள்ளி பல்லி மற்றும் தங்கப் பல்லி சிலைகளை மாற்றி விட்டு புதிய சிலைகளை அமைப்பதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க பல்லி மாயமாகிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் கோவிலில் பணிபுரியும் பட்டாச்சாரியார்கள், மணியக்காரர், கோவிலின் நிர்வாக அறங்காவலர் உள்ளிட்டவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.