தமிழக மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. அனைவருக்கும் பிப்ரவரி மாதத்திற்குள்… அரசு சூப்பர் அறிவிப்பு..!

By Nanthini on கார்த்திகை 6, 2025

Spread the love

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் இதுவரை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடந்த திட்டங்கள் அனைத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது கல்லூரி மாணவர்களுக்கு முதல் கட்டமாக வருகின்ற பிப்ரவரி மாதம் லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

2025 – 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மூன்று நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு பிறகு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.