தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கு முன்னதாக அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது அதனை விஜய் களத்தில் இறங்கி முற்றிலுமாக மாற்றியுள்ளார். இதனால் 2026 தேர்தல் களம் யாருக்கானது என்பது பரபரப்பாகவே பார்க்க படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் புதிதாக அரசியலில் களம் இறங்கியுள்ள விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான், யாருடனும் கூட்டணி கிடையாது என்று சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இன்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் பல செய்தி நிறுவனங்கள் வாக்கு கணக்கெடுப்பு எடுத்து வருகின்றன. இதில் பெண்களின் வாக்குகள் அதிக அளவு திமுகவிற்கு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திமுக கொண்டு வந்த பெண்கள் நலத்திட்டம் இதற்கு மைய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல இளம் பெண்களில் வாக்குகள் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் திமுக என இரண்டுக்கும் சமமாக கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
