திமுகவில் 10 வருடம் காலம்…. பாவமன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்… ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்…!

By Nanthini on கார்த்திகை 5, 2025

Spread the love

கரூர் சம்பவத்திற்கு பிறகு இன்று சென்னை மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, சூழ்ச்சி என்றால் என்னவென்று கரூரில் பார்த்துவிட்டோம். சூழ்ச்சி செய்த திமுக இன்று மக்கள் மத்தியில் குற்றவாளியாக நிற்கின்றது. திமுகவின் பொய் பிரச்சாரங்களை தன்னுடைய அமைதியின் மூலம் முறியடித்து மௌன புரட்சியை தலைவர் செய்திருக்கின்றார். நாங்கள் ஓடி விட்டோமா? நாங்கள் தலைமறைவாகிவிட்டோமா? கலைஞரை கைது செய்த போது அவருடைய மகன் ஓடினாரே அந்த வரலாற்றை நாங்கள் பேசட்டுமா.

இந்தியாவின் நம்பர் ஒன் நடிகர், அதிகபடியான சம்பளம் என அதையெல்லாம் விட்டுவிட்டு தலைவர் அரசியலுக்கு வந்திருக்கின்றார். திமுகவிற்கு பத்து வருடம் வேலை பார்த்ததற்கு பாவமன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது நல்ல கட்சியாக இருந்தது. நம் தலைவரை கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு ஆதரவு தருகிறேன் என்று சொன்னார். அதற்கு உங்களுக்கு நன்றி உணர்வு இல்லை என்று ஆதவ் அர்ஜுனா  விமர்சித்துள்ளார்.