“ஒரே என்கவுண்டர் தான்…” துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.100 கோடி சொத்துக்கு குவித்த டிஎஸ்பி…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 5, 2025

Spread the love

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டிஎஸ்பி ரிஷிகாந்த் சுக்லா என்கவுண்டர் அதிகாரி. இவர் ஊழல் மற்றும் மிரட்டல் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது ரிஷிகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். என்கவுண்டர் அதிகாரி என்பதை பயன்படுத்தி நில உரிமையாளர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பேன் எனக்கூறி துப்பாக்கி முனையில் சொத்துக்களை பறித்துள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது 70 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ரிஷிகாந்த் சுக்லா படித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

கான்பூரை சேர்ந்த வழக்கறிஞரான அகிலேஷ் துபேயுடன் இணைந்து ரிஷிகாந்த் சுக்லா குற்ற செயல்களை நடத்தியதாகவும், போலியான பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு வழக்குகளை பதிவு செய்து விடுவோம் என மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. வழக்கறிஞர் அகிலேஷின் கட்டுமான நிறுவனத்தில் ரிஷிகாந்த் சுக்லா தனது மனைவி பிரபா சுக்லா மூலம் முதலீடு செய்து கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றி உள்ளார். தற்போது அவரது சொத்துக்களை முடக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது