இனி போன் நம்பரை பகிராமலேயே இந்த வசதி.. வாட்ஸ் அப்பில் வந்த புதிய அப்டேட்…!!

By Soundarya on கார்த்திகை 5, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தள செயலிகளை மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடுவதற்கு பெரும்பாலானோர் whatsapp செயலியை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு whatsapp இல் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தன்னுடைய பயனர்களை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள, Whatsapp அடுத்தடுத்த அதிரடி அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தான், தற்போது Username வசதியை வாட்ஸ் அப் உருவாக்கிக் வருகிறது. இதன் மூலம், வாட்ஸ் அப்பில் இனி Voice/ Video Call-கள், மெசேஜ்களை போன் நம்பரை பகிராமலே செய்யலாம் என்று  கூறப்படுகிறது. Beta பரிசோதனையில் இருக்கும் இந்த வசதியானது கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.