விஜய் சார் கொடுத்த 20 லட்சம் பணம்… என் மருமகன் வீணாக்குறாரு… கரூர் துயரத்தில் உயிரிழந்த பெண்ணின் தாயார் கதறல்…!

By Soundarya on கார்த்திகை 5, 2025

Spread the love

கரூரில் தமிழக வெற்றிக்கழகப் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். பலியானவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் உதவி  TVK  சார்பாக வங்கி கணக்கில் அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்த விஜய் விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார். அதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்களையும் மாமல்லபுரத்திற்கு அழைத்து அவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் கணவர் 20 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு அதை வீணாக்கி வருகிறார் என்று அந்த பெண்ணின் தாயார் கண்ணீரோடு கூறியுள்ளார். சுதா என்ற பெண்ணுக்கு 4 மகள்கள். அவருடைய  மகளான பிருந்தாவுக்கு திருமணம் நடந்து 3 வருடம் ஆகியது.

ஆனால் கணவரோடு இரண்டு ஆண்டுகளே வாழ்ந்தார். இந்த தம்பதிக்கு 2 1/2 வயது பெண் குழந்தை உள்ளது. விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற அந்த பெண்ணின் உயிரிழப்புக்கு பிறகு அவருடைய உடலை பார்க்க கணவர் வரவில்லை. ஆனால் 20 லட்சம் பணம் அறிவிக்கப்பட்டதும் அரசு மருத்துவமனைக்கு சென்று அவர் பெண்ணின் உடலை தரும்படி மாமியாருடன் சண்டை போட்டுள்ளார். அதோடு இரண்டரை வயது மகளையும் மாமியாரிடமிருந்து பறித்துக் கொண்டு சென்றுவிட்டார்.

   

அப்போது அந்த மாமியார் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார் .பேத்தி பேரில் 20 லட்சம் பணம் போடும்படி கூறியுள்ளார். பணம் வாங்கும்வரை அமைதியாக இருந்து விட்டு தற்போது பேத்தியின் பெயரில் பணத்தை எல்லாம் போட முடியாது என்று மருமகன் கூறியுள்ளார் என்றும் வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு உள்ளது என்றும் பேத்திக்கு பணம் பயன்படாமல் வீணாகிறது என்றும் பிருந்தாவின் தாயார் மருமகன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார் .இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.