உங்க பேங்க் பேலன்ஸ் அறிய… இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்… உடனே நம்பரை நோட் பண்ணுங்க…!

By Nanthini on கார்த்திகை 5, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே வங்கி கணக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிறிய தேவைக்கு கூட வங்கி கணக்கு என்பது அவசியமானதாக இருப்பதால் அனைவருமே ஏதாவது ஒரு வங்கியில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இதனிடையே உங்களுடைய வங்கி இருப்பை அறிந்து கொள்வதற்கு நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கட்டணமில்லா எங்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பலாம் அல்லது வங்கியின் மொபைல் பேங்கிங் செயலி/இணைய வங்கி மூலமாக சரிபார்க்கலாம். ஒவ்வொரு வங்கிக்கும் அதன் சொந்த கட்டணமில்லா எண்கள் மற்றும் வழிமுறைகள் உள்ளது.

எனவே உங்கள் வங்கியின் சரியான முறையை அறிவது அவசியமாகும். இதனிடையே வங்கிகளின் கட்டணமில்லா எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மட்டும் போதும். SBI – 09223766666, ICICI – 09594612612, HDFC – 18002703333, AXIS:- 18004195959, UNION – 09223008586, Canara – 09015734734, BOB – 8468001111, PNB – 18001802223, Indian Bank – 9677633000, BOI – 09266135135 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் உங்களுடைய வங்கி கணக்கு இருப்பை வீட்டில் இருந்து கொண்டே இறுதியில் அறிந்து கொள்ள முடியும்