அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு பி1 /பி2 விசாவிற்கு விண்ணப்பித்தவருக்கு டெல்லியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகமானது அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது வெறும் 60 வினாடிகளில் அவருடைய விசா விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தூதரக அதிகாரி தன்னிடம் 3 கேள்விகளை கேட்டதாகவும், அடுத்த நொடியே விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார். மூத்த மென்பொருள் பொறியாளர் ஆன அவர் தற்போது தற்போது சக மென்பொருள் ஊழியர் சமூகத்திடம் இது குறித்து கருத்து கோரியுள்ளார்.
என்ன தவறு நடந்தது? அடுத்த முறை எப்படி இதை எதிர்கொள்ள வேண்டும்? என்பதை குறிப்பிட்டுள்ளார். கடந்த 11 வருடங்களாக பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி சம்பளம் வாங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமக்கு எட்டு மாதத்தில் ஒரு மகள் இருப்பதையும் இவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தியாவின் தொழில் நுட்ப ஊழியர்கள் சமூகம் அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் அவர் மீண்டும் விண்ணப்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
