திடீர் திருப்பம்… 2026 தேர்தல் வெற்றி யாருக்கு?… வெளியான பரபரப்பு கருத்துக்கணிப்பு…!

By Nanthini on கார்த்திகை 4, 2025

Spread the love

தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு திமுக ஆட்சியை மீண்டும் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வர மறுபக்கம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக ஆட்சியை நிலைநாட்ட பல திட்டங்களை தீட்டி வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபல தனியார் youtube சேனல் ஆன சாணக்கியா 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு. ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடந்தால் எந்த கட்சி மற்றும் எந்த கூட்டணி வெற்றி பெறும் என நடத்திய கருத்துக்கணிப்பில், நாம் தமிழர் கட்சி 5 சதவீதம், தமிழக வெற்றி கழகம் 20%, திமுக கூட்டணி 36 சதவீதம், அதிமுக கூட்டணி 39 சதவீதம் வெற்றி பெறும் என தரவுகள் வெளியாகி உள்ளது.