இந்த வயசுல பண்ணுற வேலையா…? வீட்டுக்குள் புகுந்த சிறுவர்கள்…! காட்டிகொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on கார்த்திகை 3, 2025

Spread the love

சென்னை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பால முகுந்தன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 16 ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளி டம்ளர், 2 செல்போன்கள் ஆகியவற்றை மர்ம நவர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பால முகுந்தன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து டிவிஎஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், அவரது கூட்டாளிகளான இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணம், வெள்ளி டம்ளர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் ஆகாஷை நீதிமன்றத்தில் சிறையில் அடை த்தனர். மற்ற 2 பேரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.