காரை அடமானம் வைத்து பணம் வாங்கிய நபர்…! “பட்டப்பகலில் பைனான்சியரை கடத்தி…” அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 3, 2025

Spread the love

சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(53). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு வாணுவம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன்(33) என்பவர் அறிமுகமானார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது காரை அடமானம் வைத்து 2 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். அதன் பிறகு கண்ணனுக்கும் சரவணனுக்கும் இடையே அடமானம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவணன் உள்ளிட்ட சிலர் கண்ணனை காரில் கடத்தி சென்று 5 லட்ச ரூபாய் பணம் கேட்டு கட்டையால் தாக்கி மிரட்டி உள்ளனர். கண்ணன் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே கடத்தல்காரர்கள் அவரை கீழே இறக்கிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சரவணன், அவரது நண்பர்களான சிவானந்தம், முரளி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.