புதுச்சேரி பஜனை மடத்து வீதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரும் நைனார் மண்டபம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் கோழி லோடுகளை இறக்கி வந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இந்த நிலையில் வெங்கடேசனின் மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சந்துரு அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதுகுறித்து வெங்கடேசனின் மனைவி தனது கணவரிடம் கூறியுள்ளார். உடனே அவர் சந்துருவை அழைத்து கண்டித்தார்.
நேற்று சந்துரு வெங்கடேசன் மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவரது அழகை வர்ணித்து பேசினார். இதனால் கோபமடைந்த வெங்கடேசன் சந்துருவை மது குடிக்க அழைத்துச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அரிவாளால் சந்துருவின் தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்துருவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
