தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்தியாவின் வரலாற்று வெற்றி நாடு முழுவதும் கொண்டாட்டங்களைத் தூண்டியுள்ளது, மேலும் பெருமைமிக்க குரல்களில் இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலியும் ஒருவர். நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தனது முதல் மகளிர் உலக பட்டத்தை வென்றுள்ளது.
இந்நிலையில் கோப்பையை கையில் வாங்கி கொண்டாடுவதற்கு இந்திய அணியினர் ரெடியாக இருந்த போது, ஓரத்தில் Wheel Chair-ல் இருந்தபடி பிரதிகா ராவல் அதை ரசித்து கொண்டிருந்தார் . அதை கவனித்த ஸ்மிருதி மந்தனா, கோப்பையை வாங்குவதற்கு முன்பாக, அவரையும் மேடையேற்றினார். Wheel Chair-ல் உட்கார்ந்தபடியே, பிரதிகா ராவல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரதிகா, தொடர்ந்து இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது
