“15 வருட தெருவோர வாழ்க்கை…” மாமனாரை அடித்து கொன்ற மருமகன்…. போதையில் வெறிச்செயல்…! பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2025

Spread the love

தூத்துக்குடியை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுமார் 15 ஆண்டுகளாக ஆசீர்வாதம் தனது குடும்பத்தை பிரிந்து தெருவோரங்களில் கிடைக்கும் இடத்தில் தூங்கி வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மது போதைக்கு அடிமையான ஆசீர்வாதம் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று ஆசீர்வாதம் மது அருந்த சென்ற போது அவரது மருமகன் அஜயும் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது மாமனார், மருமகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் அஜய் கட்டையால் ஆசீர்வாதத்தின் மண்டையில் சரமாரியாக அடித்துள்ளார். இதனால் படுகாயம் ஆசிர்வாதத்தை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசீர்வாதம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.