மனைவி, நண்பருடன் அறை எடுத்து தங்கிய நபர்…. மறுநாள் 3 பேருமே…! நடந்தது என்ன…? பகீர் பின்னணி…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2025

Spread the love

திருவாரூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி விஜயகுமாரி. கடந்த 30-ஆம் தேதி கலியபெருமாள் தனது மனைவி விஜயகுமாரி, நண்பர் லோகநாதன் ஆகியோருடன் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மறுநாள் காலை பொதுமக்கள் வெளியே நடந்து சென்றனர். அப்போது ஜன்னல் திறந்து கிடந்தது.

உள்ளே பார்த்தபோது கலியபெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது லோகநாதன், விஜயகுமாரி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், கலியபெருமாள் தூக்கிட்டு நிலையிலும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

   

அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறையில் இருந்த கடிதத்தில் கடன் நிறுவனங்களில் கடன் வாங்கியுள்ளோம். அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்ததால் வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.

   

மறுபுறம் போலீசார் நடத்திய விசாரணையில் விஜயகுமாரி, லோகநாதன் இடையே தகாத உறவு இருந்ததாகவும், இருவரும் ஊரை விட்டு சென்றதும் தனது மனைவி காணாமல் போய்விட்டார் என கலியபெருமாள் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்ததும் தெரிய வந்தது. பின்னர் கடந்த 27-ஆம் தேதி தனது மனைவி கிடைத்துவிட்டார் எனக்கூறி கலியபெருமாள் புகாரை திரும்ப பெற்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.