ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பாடல்… படத்திலிருந்து நீக்கிய தயாரிப்பாளர்கள்…? இதுதான் காரணமா…?

By Devi Ramu on கார்த்திகை 2, 2025

Spread the love

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தி கேர்ள் பிரண்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்ற “நதிவே” பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் அந்த பாடலை உருவாக்கியுள்ளனர். படத்தின் இறுதிப் பகுதியில் அந்த பாடலை சேர்க்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏனென்றால் பாடல் கதையின் உணர்ச்சி ஓட்டத்திற்கு பொருந்தவில்லை என தயாரிப்பாளர்கள் நினைத்துள்ளனர். இதனால் அந்த பாடலை நீக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை படத்திலிருந்து பாடல் நீக்கப்பட்டாலும் இணையத்தில் நதிவே வைரலாகி வருகிறது. வருகிற 7-ஆம் தேதி தி கேர்ள் பிரண்ட் படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.