“அம்மா நான் உன்னை விட்டு போறேன், அக்கா, தம்பியை நல்லா பாத்துக்கோ”… காதல் தோல்வியால் மாணவி தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!

By Nanthini on கார்த்திகை 2, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் ஊராட்சியில் வசித்து வரும் கலாவதி என்பவருடைய கணவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் அவர்களுடன் தனியாக வசித்து வருகின்றார். தளபதியின் இரண்டாவது மகளான 19 வயதுடைய ஹரிதா திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு எதிரே உள்ள மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஹரிதாவிற்கு அதே கிராமத்தில் உள்ள கோவிந்தம்மாள் என்பவருடைய உறவுக்கார பையனான திலீப் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திலீப் ஆந்திர மாநிலம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் லிப்ட் ஆப்பரேட்டிங் பணி செய்து வந்த நிலையில் திருவிழாக்களின் போது கோவிந்தம்மாள் வீட்டுக்கு வரும் சமயத்தில் அவருக்கு ஹரிதா உடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் இது பற்றி அறிந்த கோவிந்தம்மாள் காதலிக்க வேண்டாம் என்றும் அவர் வசதிகள் குறைந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

   

இதனால் இரண்டு வருடமாக நெருக்கமாக பழகிய திலீப் ஹரிதாவிடம், உன்னிடம் பழக முடியாது, உன்னை காதலிக்க முடியாது, கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் மனமடைந்த ஹரிதா அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வெள்ளை பேப்பரில் கடிதம் ஒன்று அவருடைய தாய் கலாவதிக்கு எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நீ கஷ்டப்பட்டு என்னை வளர்த்து உள்ளாய், நான் என்ன தவறு செய்தாலும் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டு உள்ளாய், என்னுடைய அக்கா அனிதா மற்றும் தம்பி கௌதம் ஆகியோர்களை நன்றாக பார்த்துக்கொள், அக்கா அனிதா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்.

   

எனது மனம் வலிக்கிறது. உங்களை விட்டு நான் பிரிகின்றேன். என்னுடைய மரணத்திற்கு காரணம் திலீப் மற்றும் அவருடைய சித்தி கோவிந்தம்மாள் ஆகியோர்களை சும்மா விடாதிங்க. ஐ மிஸ் யூ மை ஃபேமிலி என்று எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.