கர்நாடக மாநில மைசூரு மாவட்டம் அருகே உள்ள பகுதியில் சையது முஷவீர் என்பவருக்கு அபியா பானு (25) என்ற மனைவியும், பாத்திமா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும், பிறந்து பத்து நாட்களை ஆன பச்சிளம் குழந்தையும் இருந்துள்ளனர். இதனிடையே அபியா பானுவின் மூத்த குழந்தை பாத்திமா மாற்றுத்திறனாளியாக பிறந்த நிலையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அபியா பானு மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சனையும் இருந்துள்ளது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பானு நேற்று காலை கணவன் வேலைக்குச் சென்ற பிறகு தன்னுடைய 2 பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பிறகு அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். உடனே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2 பச்சிளம் குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
