பொதுவாகவே பருவ கால மாற்றங்கள் ஏற்படும்போது நம்மில் பலருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றுதான் பொடுகு தொல்லை. இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி உதிர்வு என்பது அதிகமாகவே இருக்கும். பொடுகு பிரச்சனை என்று கூறும் போது பல காரணங்கள் உள்ளது. ஆனால் பலரும் தலையில் சருமம் வறண்டு போய் உள்ளது என்றுதான் நினைப்பார்கள். அதனால் பொழுது தொல்லை வராது. அதற்காக அடிக்கடி எண்ணெய் வைப்பது மற்றும் குடிப்பது போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.
வறட்சி காரணமாக வரும் பொடுகு இப்படி செய்தால் சரியாகிவிடும். அதே சமயம் வேறு சில காரணங்களால் வரக்கூடிய பொடுகு இப்படி செய்தால் போகாது. தலையில் பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் உங்கள் வீட்டு சமையல் அறையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு சில பொருட்களை வைத்து பேக் செய்து போட்டால் அரிப்பு மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் சரியாகும். பொடுகு தொல்லை இருப்பவர்கள் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் எப்படி பொடுகை சரி செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தயிர் பேக்:
தயிருடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் உங்கள் தலைக்கு படும்படி நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 30 நிமிடங்கள் ஊறவிட்டு மைல்ட் ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இப்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் செய்து வந்தால் பொடுகு பிரச்சனை தானாகவே சரியாகும்.
கிரீன் டீ பேக்:
கிரீன் டீ உடன் புதினா எண்ணெய், வினிகர் ஹேர் மாஸ்க் ஆகிய பொருள்களை நன்றாக கலந்து விட்டு தலைக்கு படும்படி நன்றாக தடவி தலையில் ஊற வைக்க வேண்டும். பிறகு மைல்ட் ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசலாம். இப்படி செய்தால் பொடுகு தொல்லை தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
செம்பருத்தி பூ பேக்:
செம்பருத்தி பூவை வெந்தய நீர் சேர்த்து ஊற வைத்துவிட்டு அரைத்து அந்த கலவையை தலைக்கு போடலாம். அதனுடன் கொஞ்சமாக தயிர் சேர்க்கலாம். பிறகு தலைக்கு தடவி நன்றாக மசாஜ் செய்துவிட்டு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். மயில் டிசைன் பயன்படுத்தி தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் செய்தால் பொடுகு பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைப்பதோடு தலைமுடி உதிர்வு குறைந்து முடி நன்றாக வளரும்.
