தமிழகம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வருகின்ற திங்கட்கிழமை நாளை முதல் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முக்கிய அம்சமாக முதியோர்களின் வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 70 வயதை கடந்தவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட இருந்த நிலையில் தற்போது 65 வயது நிரம்பினாலே ரேஷன் பொருட்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
