தமிழ் சினிமாவில் காமெடி, வில்லன், குணச்சித்திரம் என கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் ஆனந்த்ராஜ், எண்பதுகளின் இறுதியில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று வரை முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை, தனது முதுகில் குத்திய நபர்கள் குறித்து பட விழா ஒன்றில் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற “மெட்ராஸ் மாஃபியா கம்பெனி” பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆனந்த்ராஜ், முதுகில் அவ்வளவு காயம், ரத்தம். என்னை இந்த இடத்துக்கு தள்ளிவிட்டார்கள். வேறு வழி தெரியவில்லை, எனக்கு தேடி வரும் வாய்ப்புகளை பல நடிகர்கள், யார் யாரோ தடுத்துள்ளார்கள். தயவு செய்து கலையை கலையாக பாருங்கள் என்று உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
