BREAKING: கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் “A1” – செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு..!

By Soundarya on கார்த்திகை 1, 2025

Spread the love

ஓபிஎஸ், டி.டி.வி-ஐ சந்தித்ததன் எதிரொலியாக, அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த செங்கோட்டையன், ஜெ., மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா தன்னிடம் பேசினார்.. ஆனால், அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இபிஎஸ் பெயரை பரிந்துரை செய்தேன் . 2 முறை முதல்வர் வாய்ப்பு கிடைத்தும் அதிமுக உடைந்துவிடக்கூடாது என விட்டுக்கொடுத்தேன். திமுகவின் ‘B’ டீமாக நான் இல்லை, கோடநாடு வழக்கில் இபிஎஸ் தான் A1 ஆக இருக்கிறார்.

அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசினேன். தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினேன் என்று கூறியுள்ளார்.